Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 04 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
குச்சவெளி மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அனுமதியைக் கடற்படைக்கு கொடுத்து யார்? சுருக்கு வலைக்கான அனுமதிப்பத்திரம் காலி,ஹம்பாந்தோட்டை,மாத்தறை போன்ற பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் வடக்கு,கிழக்கில் மட்டும் இதற்குத் தடை ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை(04) விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
குச்சவெளியில் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையாகக் காணப்பட்ட நிலையில், அது துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இதில் ஒரு இளைஞன் காயமடைந்துள்ளார்.
இந்த மீனவர்களின் பிரச்சினைகளை நாம் இங்குள்ள அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். அதனடிப்படையில் கடற்றொழில் திணைக்களத்தால் முறையாக வழங்கப்பட்டுள்ள சுருக்குவலை அனுமதிப்பத்திரம் பெற்ற மீனவர் தாக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
இந்த சுருக்குவலை அனுமதிப்பத்திரத்திலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 7 மைல் நிபந்தனை தான் பிரதான காரணமாகவுள்ளது. இந்த நிபந்தனை திருகோணமலை மாவட்டத்தைப்பொறுத்தவரை குடா பகுதிகளுக்கு பொருத்தமற்ற நிபந்தனையாகக் காணப்படுகின்ற காரணத்தினால்தான் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
முஸ்லிம்கள் ஹஜ்ஜூப்பெருநாளை எதிர்கொள்கின்ற இந்த நேரத்தில் அந்த பிரதேசத்தில் இருக்கின்ற மீனவர்கள் வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற வகையில் கடலுக்குச் செல்கின்ற நிலையில், இவர்கள் தீவிரவாதிகளாக,போதைப்பொருளைக் கடத்துபவர்களாகக் கருத்தில்கொண்டு தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே இந்த தாக்குதல் தொடர்பில் சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த மீனவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கான அனுமதியைக் கடற்படையினருக்கு யார் கொடுத்தது? இந்த துப்பாக்கி பிரயோகத்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமானால் நிலைமை என்ன?முன்னர் இந்த நிபந்தனையை மீனவர் மீறினால் கடற்படையினர் பொருட்களைப் பறிமுதல் செய்வார்கள், எச்சரிப்பார்கள். ஆனால், இன்று துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்கு வந்துள்ளார்கள் இந்த சம்பவம் அந்தப்பிரதேசத்தில் இனவாதமாகவே பார்க்கப்படுகின்றது.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago