Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 மே 04 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு தாழங்குடா மக்கள்குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் திடீரென உட் புகுந்த இராட்சத முதலையை மடக்கிப்பிடித்துள்ளனர் .
மட்டக்களப்பு தாழங்குடா முதலாம் குறிச்சி பகுதிக்குள் சனிக்கிழமை (03) அன்று அதிகாலையில் மக்கள் குடியிருப்பு பகுதி காணிக்குள் திடீரென புகுந்த முதலையை கண்டு அச்சமடைந்து பொது மக்கள் அனைவரும் சேர்ந்து நள்ளிரவில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் முதலையை மடக்கி பிடித்து கட்டி வைத்துள்ளனர்.
கடந்த ஓரிரு தினங்களாக பெய்த மழை காரணத்தால் மட்டக்களப்பில் உள்ளவாவிகள் மற்றும் குளங்களில் நீர்நிறைந்து காணப்படுவதனால் அவற்றிலிருந்து முதலைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள் நுழையும் நிலைஅதிகமாக காணப்படுகின்றது.
கிராம மக்களால் மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்ததை அடுத்து அவர்களும் வருகை தந்து கட்டிவைத்திருந்த முதலையை கடும் போராட்டத்திற்கு மத்தியில் சிரமப்பட்டு பிடித்து பாதுகாப்பாக மீட்டு மனித நடமாட்டம் அற்ற நீர் நிலையில் முதலையை விடுவித்துள்ளனர்.
வ.சக்திவேல்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
2 hours ago