Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 29 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
ஜனாதிபதியின் 'சுபீட்சமான எதிர்காலம் திட்டத்தின்' மூலம் சமுர்த்தி திணைக்களத்தினால் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் நோக்கில் கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு செயலகத்தில் இன்று நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராசா, செயலக கணக்காளர் எம்.சஜ்ஜாத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எம்.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது எட்டு கிராம சேவகர் பிரிவில் இருந்து இருபத்தி நான்கு பேருக்கு( ஐயாயிரம் ரூபா பெறுமதியான )பதினான்கு கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டதாக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எமம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago