Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
கொவிட் நிதியத்துக்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” மருத்துவ உபகரணங்களுக்காக எமது கட்சி ஆரம்பித்துள்ள கொவிட் நிதியத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத சம்பளத்தை வழங்க முன்வந்ததை அடுத்து எம்மை பின்பற்றி சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தமது சம்பளத்தை வழங்க முன்வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
எனினும் இதுபோன்று அரச ஊழியர்களும் தமது பாதி சம்பளத்தை வழங்க வேண்டும் என விடுக்கும் கோரிக்கை நியாயமற்றது. இதுவரை அரச ஊழியர்களின் சம்பளமானது உயர்த்தப்படவில்லை. அத்துடன் அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலைகளும் தற்போது உயர்வடைந்துள்ளது.
இவ்விலையேற்றத்தால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல அரச ஊழியர்கள் சம்பளம் பெற்று அடுத்த நாளே கடன் பெரும் சூழ்நிலையிலேயே உள்ளனர்.இவ்வாறிருக்க அவர்களிடம் எவ்வாறு பாதி சம்பளத்தை கேட்க முடியும்.
கடந்த காலங்களில் அரசின் கொவிட் நிதியத்துக்கு பல நாடுகளும் தனியார் நிறுவனகளும் தனவந்தர்களும் நன்கொடை வழங்கினார்கள்.அந்த பணத்துக்கு என்ன ஆனது? அதுதொடர்பான கணக்கு அறிக்கையை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை.இது இவ்வாறு இருக்க எதை நம்பி அரச ஊழியர்கள் தமது சம்பளத்தை வழங்குனர்கள்.
அரசினதும் அமைச்சர்களினதும் ஆடம்பர செலவுகளை குறைத்தால் பெரும்தொகை பணத்தை சேமிக்கலாம்.எனக்கு ரோஹித ராஜபக்ச அனுப்பிய செயற்கை கோளே இப்போது நினைவுக்கு வருகிறது.அந்த செயற்கை கோளுக்கு என்ன நடந்தது என இதுவரை தெரியவில்லை.அந்த திட்டத்துக்கு 320 மில்லியன் செலவானதாக கூறப்படுகிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago