R.Tharaniya / 2025 ஏப்ரல் 16 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில்சடலம் ஒன்றை பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (15) மாலை சம்மாந்துறை பொலிஸார் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் என்பதுடன் உயிரிழந்தவர் வாடகை கடையில் சிகை அலங்கார கடை நடத்தி வந்தவர் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த நபர் வேலையின் நிமித்தம் சிகை அலங்கார கடை வேலைகளை முடித்து கடையறைக்குள் இரவு தூக்கத்தை கழிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் தெரிய வந்துள்ளதுடன் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்


2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago