R.Tharaniya / 2025 ஜூன் 04 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டு . நகரில் உள்ளமூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் 44 மாணவர்கள் வைத்தியசாலை அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் இடைவேளையின் போது பாடசாலையில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.
உணவு ஒவ்வாமையினால் மாணவர்களுக்கு வாந்தி பேதி, தலைசுற்றல் ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினர் நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக நோய் காவு வண்டிகளில் மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வ.சக்தி
33 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
7 hours ago
9 hours ago