Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 18 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும்,முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை சனிக்கிழமை (17) அன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்துவைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் ஏற்பாட்டில் தொழிலதிபர் மு.செல்வராஜாவின் முயற்சியினாலும் சுவாமி விபுலானந்தரின் முதலாவது கற்சிலையாக இது திறந்துவைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன்,மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன்,பிரதேச செயலாளர்கள்,முன்னாள் அரசாங்க அதிபர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து சுவாமியின் திருவுருவ சிலை திறந்துவைக்கப்பட்டதுடன் யாழ் மற்றும் யாழ் நூல் என்பனவும் திறந்துவைக்கப்பட்டதுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு கல் படிகம் திறந்துவைக்கப்பட்டது.
க.விஜயரெத்தினம்
21 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
4 hours ago