2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

“சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்“

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களது அரசியல் தேவைகளுக்காக, ஆட்சிகளை கொண்டு வருவதற்காக, ஆட்சிகளை உருவாக்குவதற்காக சிலர் முஸ்லிம் இளைஞர்களை திசை திருப்பி இவ்வாறு மிக மோசமான செயலை மேற்கொண்டிருந்தார்கள். இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகமும் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் பிராத்திக்கிறோம். 

இச் செயலுக்காக நாங்கள் மிகவும் மன வேதனை அடைந்தோம். இன்னும் அந்த வேதனை அடைகின்றோம்.

காத்தான்குடி பிரதேசம் அநியாயமாக பல சோதனைகளையும் சவால்களையும் சந்திந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். தற்போது தான், சில உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள்?, யார் இதை செய்தார்கள்? என்ற உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நூருல் ஹுதா உமர்


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .