Freelancer / 2023 மே 02 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.நிப்றாஸ்
அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்தில் அடுத்த கல்வியாண்டில் தரம்-11 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு எழுத்துமூல அனுமதியை வழங்கியுள்ளது.
அத்துடன் 2023 கல்வியாண்டுக்காக தரம் 10 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆண்கள் வித்தியாலயமானது வகை-2 (தரம் 1-11) வகைப்படுத்தலுக்குரிய பாடசாலையாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில், இதுவரை இப் பாடசாலையில் தரம் 9 வரை மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிலையில், அதனை மேலும் தரமுயர்த்துவதற்கு கடந்த காலங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், அவை கைகூடியிருக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில், பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகிவற்றின் அயராத முயற்சியினாலும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உயரதிகாரிகள், பாடசாலைச் சமூகம், மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய பெற்றோரின் ஆதரவினாலும் இவ் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
வலயக் கல்வி அலுவலகத்தின் ஊடாக அனுப்பப்பட்ட ஆவணங்கள் மற்றும் தேவைப்பாடுகளை பரிசீலனை செய்த கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களத்தின் கட்டமைப்புக் குழுவானது இவ்வருடம் தரம் 10 இற்கும், அடுத்த வருடம் தரம் 11 இற்கும் மாணவர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025