Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்கெடுப்பு நிலையத்தில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாளஅட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக ஆள் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாக அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சிந்தகஅபேவிக்கிரம ஞாயிற்றுக்கிழமை (27) அன்று தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிபத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் மதகுருமார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை போன்ற ஆள் அடையாள அட்டை இல்லாதவர்கள்.
தத்தமது கிராம சேவை அதிகாரிகளிடம் தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படவுள்ள தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதேச செயலகங்கள் ஊடாக பொது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தெளிவில்லாத அடையாள அட்டைகள், அமைச்சுகளால் அல்லது திணைக்களங்களினால் மற்றும் அரச நிறுவனங்களினால் விநியோகிக்க-ப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டைகள் அல்லது வேறெந்த ஆவண-மும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம்.ஹனீபா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
52 minute ago