2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தற்காலிக கடமையை நிரந்தரமாக்க கோரி ஆர்ப்பாட்டம்

R.Tharaniya   / 2025 மே 20 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஐக்கிய பொது சேவையாளர் சங்கம்  செவ்வாய்க்கிழமை (20) அன்று பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி பூங்கா வரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

வீதி அதிகார சபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள்  கடந்த 9 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வருகின்றநிலையில் அவர்களை இதுவரை காலமும்  நிரந்தரம் ஆக்கப்படவில்லை எனவே அவர்களை நிரந்தராக்குமாறு கோரி ஐக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது

இதையடுத்து நகரிலுள்ள பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்துக்கு அருகில் ஒன்று கூடிய வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வரும் ஊழியர்கள் பகல் 12.00 மணிக்கு ஒன்று திரண்டு  அனைத்து தற்காலிக

ஊழியர்களை நிரந்தரமாக்கு, 14 நாள் மருத்துவ லீவு வழங்கு, ஏனைய ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்கு, ஜனாதிபதியே எங்களை நிரந்தரமாக்கு போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த  ஆர்ப்பாட்டம் 1.00 மணி வரை  இடம்பெற்ற பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X