Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 09 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
மகன் தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா மூன்று நாட்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை(08) நல்லடக்கம் செய்யப்பட்டது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் வசித்து வந்த 71 வயதுடைய தாய் ஒருவரே அவரது 42 வயது மகனின் தாக்குதலில் ஞாயிற்றுக்கிழமை (6) மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த தாயும் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகனும் அனாதரவான நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ள நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயதான தாயுடன் மகன் முரண்பட்டுக் கொண்டு தாக்கிய போது தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடம் தொடர்பில் மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மரணமடைந்த தாயின் உடல் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் ஜனாஸாவை ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பினர் பொறுப்பேற்று ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் மஃரிப் தொழுகையின் பின்னர் செவ்வாய்க்கிழமை (08) நல்லடக்கம் செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago