Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 18 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சனிக்கிழமை (17) மாலை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை புற நகரப் பகுதி முதல் சாய்ந்தமருது புறநகர் கடற்கரை வீதி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது,மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்கு முறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
இச் சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் இடம்பெற்றது.
இதன் போது கல்முனை சம்மாந்துறை சவளைக்கடை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து முக்கிய சந்திகள் , பிரதான புற நகர வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
குறிப்பாக இச் சோதனை நடவடிக்கையின் போது 82 பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தது.
பாறுக் ஷிஹான்
24 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
4 hours ago