Freelancer / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு சகா
கல்முனை றொட்டரிக் கழகம், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்கேணி கிராமத்தில் வசிக்கின்ற வறிய மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் 30 குடும்பங்களுக்கு, ஒவ்வொன்றும் 5,000/- பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.
இதற்கான நிதியை அன்பாலயம், அவுஸ்திரேலியாவின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தில்லையம்பலம் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
கல்முனை ரோட்டரி கழக தலைவர் ரோட்டேரியன் விஜயரத்தினம் விஜயசாந்தன் தலைமையிலான ரோட்டரி உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று வழங்கினர்.
இந்நிகழ்வில், கழக பொருளாளர் றோட்டரியன் எம். சிவபாதசுந்தரம், றோட்டரியன் நாசர் உள்ளிட்டவர்களுடன், சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago