2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

நோன்பு காலத்தை முன்னிட்டு விசேட சுகாதார பரிசோதனைகள்

Janu   / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது பிரதேசத்தில் புனித நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் மற்றும் பேரீச்சம்பழ மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தலைமையில் நடைபெற்ற இப்பணிகள், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதனின்  வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டன.

பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறைகள், காலாவதி திகதிகள், சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

குறிப்பாக நோன்பு காலத்தில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் பேரீச்சம்பழங்களின் தரநிலைகள் மற்றும் பாதுகாப்பான சேமிப்பு நடைமுறைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்து, சேமித்து, விற்பனை செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக வர்த்தகர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுகளை பெறுவதை உறுதி செய்வதே இவ் விசேட சுகாதார பரிசோதனைகளின் முக்கிய நோக்கமாகும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நூருல் ஹுதா உமர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .