2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நான்கு மரங்கள் வீழ்ந்ததில் பாடசாலை கட்டிடங்கள் சேதம்

Mayu   / 2024 ஜனவரி 01 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை  அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில்  பாரிய மரங்கள் வீழ்ந்து பாடசாலை பெரும் அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (31) மாலை வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக சம்மாந்துறை அல்ஹர்  வித்தியாலய த்தில் இருந்த நான்கு  பாரிய மரங்கள் வீழ்ந்து பாடசாலைக்கு பெரும் அனர்த்தத்தை விளைவித்துள்ளது என அதிபர் ஏ.அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

பாரிய ஆலமரம் உள்ளடங்களாக நான்கு மரங்கள் அடியோடு சாய்ந்து மூன்று பாரிய கட்டிடங்கள் பெரும் சேதத்துக்குள்ளாகின.

அண்மையிலே திறந்து வைக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டிடமும்  பாரிய சேதத்துக்குள்ளானது.

60 .20 அளவிலான புதிய கொட்டகைகட்டிடம் ஒன்றும் மாணவர் தளபாடங்கள் சகிதம் தரைமட்டமாகியதோடு மின்சார கம்பம் ஒன்றும் அடியோடு வீழ்த்தப்பட்டுள்ளது.

மேலும் இராணுவத்தினர் மற்றும் ஏனையோர் விரைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பலத்த மழை காரணமாக இன்று(1) பகல் வரை, மரங்கள் அகற்றப்படும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X