Janu / 2025 மே 25 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் நில அபகரிப்புக்களை எடுத்து காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" என்ற இரு ஆவணத் திரைப்பட வெளியீடு திருகோணமலை ஜுப்லி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது .
குறித்த வெளியீடுகளை அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) ஏற்பாடு செய்திருந்தது. இதில் குறித்த பகுதியில் உள்ள மக்களின் முதன்மையான சிக்கல்கள் தொடர்பில் ஆவணப்படுத்தும் வகையில் குறித்த திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நொயல் இம்மானுவேல், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ,சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது
ஏ.எச் ஹஸ்பர்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .