R.Tharaniya / 2025 ஜூன் 16 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை – புல் மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் திங்கட்கிழமை (16) அன்று நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், வழங்கபடாத நிலுவை சம்பளத்தை கோரியும் நிறுவனத்தினுடைய வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புல் மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் கடந்த வருடம் PL-1-2016 சம்பள அளவு திட்டத்தின் கீழ் அமைய அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் குறித்த ஊழியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது தமக்கு ஒரு வருட காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தொடர்ச்சியாக தாம் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்து எவரும் உட்செல்லவோ, வெளியேறவோ முடியாதவாறு நிறுவனத்தின் வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதிக்கு வருகை தந்த புல்மோட்டை உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் 25ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு கோரியதை அடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டன.
தற்போது கடமையாற்றும் குறித்த ஊழியர்களில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 34 பேரும், யூலை மாதம் 46 பேரும் அமைய அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் 34 பேருக்கு 3 மாதங்கள் சம்பளம் வழங்கப்படும் ஏனையவர்களுக்கு இதுவரை எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இந்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதியில் நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரியும், நியமனத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருந்ததாகவும் இதன்போது நேர்முகத்தேர்வு வைப்பதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருந்ததாகவும் எனினும் இதுவரை அது நடைபெறவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இது தொடர்பாக நிர்வாகத்திடம் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சம்பளம் வழங்கப்படாத நிலையில் புல்மோட்டை க்கு வருகை தந்த அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி அவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது பொது முகாமையாளர் பெப்ரவரி மாதம் சம்பளம் வழங்கப்படும் என கூறிச் சென்றார்.
இந்த நிலையில் இது தொடர்பாக நிர்வாகத்துடன் பேசியபோது நியமனத்தை நாள் சம்பள அடிப்படையில் மாற்றி நாளாந்த கூலி அடிப்படையில் வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியப்படுத்த பட்டுள்ளதாகவும் அந்த அடிப்படையில் அதை எதிர்த்தும், சம்பளம் வழங்கக் கோரியும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தமக்கு சரியான தீர்வு கிடைக்க பெறும் வரையில் அதை தொடர இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.


அ . அச்சுதன்
47 minute ago
51 minute ago
1 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
1 hours ago
13 Mar 2026