R.Tharaniya / 2025 ஜூன் 01 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு-கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக் காணப்படும் ஆணின் சடலம் ஒன்று சனிக்கிழமை (31) அன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு-வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய சிவகுமார் என்ற கூலித் தொழிலாளியே உயிரிழத்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச் சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேளாண்மை வாடியொன்றில் காவலாளியாகப் பணியாற்றிய இவர் கடைத்தெருவிற்குச் சென்று வருவதாக அவரது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளபோதிலும் இரவாகியும் வயல் வாடிக்குத் திரும்பவில்லை.
இவரை தேடியவேளையில் வயல்வாடிக்கு மிக அண்மித்துள்ள ஆற்று நீரோடையில் சடலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கரடியனாறு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசிர் அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டு சடலத்தை தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க முற்பட்ட போது அருகிலிருந்த வயல்வாடியின் நீர் பம்பியுடன் தொடர்புபடுத்தி வலது கால் கட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
இதனால் தடயவியல் சொக்கோ பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதுடன் ஏறாவூர் நீதிமன்ற பதில் நீதிபதி கே.தியாகேஸ்வரன் அங்கு வருகை தந்து பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
அதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


க.விஜயரெத்தினம்
30 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago
9 hours ago