2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்ட வழக்கு ஒத்திவைப்பு

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் இம்மாதம் 30ம் திகதிக்கு  ஒத்திவைப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன்  முன்னிலையில் திங்கட்கிழமை (21) அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது குறித்த வழக்கு இம்மாதம் 30திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு-செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையின் போது, கொம்மாதுறை பகுதியில்-மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்குத் தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற  குற்றச்சாட்டில்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 பேரின்பராஜாசபேஷ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .