Janu / 2024 ஜனவரி 11 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகள் வெள்ளிக்கிழமை (11) ஆரம்பமாக இருந்த நிலையில் அப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அடைமழை மற்றும் வெள்ளநிலை காரணமாக வெள்ளிக்கிழமை (11) மற்றும் சனிக்கிழமை (12) ஆகிய தினங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு மீண்டும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) வழமைபோன்று பாடசாலைகள் இடம்பெறும் என கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த இரு விடுமுறை தினங்களுக்கும் பதிலாக (20) , (27) ஆம் சனிக்கிழமை நாட்களில் பாடசாலை நடைபெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.
நூருல் ஹுதா உமர்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .