Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 15 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் அக்கரைப்பற்று கல்முனை பிரதான பாதையில் நிந்தவூர் மாட்டுப்பளை பிரதேசத்தில் சேதம் அடைந்துள்ள பாலத்தை மீள் புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர், இஸட்.ஏ.எம்.அஸ்மீர் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று தெரிவித்தார்.
பாலம் சேதம் அடைந்ததால் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியின் ஊடாக போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்த வேளையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் உடனடியாக எடுக்கப்பட்டநடவடிக்ககையினால் இரு வார காலத்திற்குள் தற்காலிக பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டதால் போக்கு வரத்துகள் வழமை நிலைக்கு திரும்பியதாக தெரிவித்தார்.
சேதம் அடைந்துள்ள பாலத்தின் நிர்மாணப் பணிகள் முடியும் வரை தற்காலிக பாலத்தினுாடாக போக்குவரத்துச் செய்யும் வாகனங்கள் ஒன்றாக செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்ட்டுள்ளது.
சேதமடைந்துள்ள பாலத்திற்கான நிர்மாணப் பணிகளை விரைவாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் சேதமுற்றுள்ள சிறிய, பெரிய பாலங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் இப் பாலங்களின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் போக்குவரத்திற்காக திறந்து விடப்படும் என்றும் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.ஹனீபா
27 minute ago
44 minute ago
49 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
44 minute ago
49 minute ago
56 minute ago