2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பிறந்த நாளில் இரத்ததானம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் 46ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரத்தான நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில், மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்; அங்கத்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் நிரோசன் லோரன்ஸ் தலைமையிலான வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


கொரோனாத் தொற்றுப் பரவல்  காரணமாக அண்மைக்காலமாக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தம் பற்றாக்குறையாகக்  காணப்படும் நிலையில் சுகாதார விதிமுறைக்கமைய இரத்த தானத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டதாக வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.
 









 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .