2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பெற்றிக்கலோ கம்பஸ்சில் ’ திருடிய இருவர் கைது

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 30 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்
 
மட்டக்களப்பு புணானையில் அமைந்துள்ள 'பெற்றிக்கலோ கம்பஸ்சில் 'பெறுமதி வாய்ந்த கணினிகளையும், இலத்திரனியல் உதிரிப்பாகங்களையும் களவாடியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நேற்று  மாலை பெற்றிக்கலோ கம்பஸிற்க்கு உள்ளே இருந்து வந்த வானினை பொலிஸார்  சோதனையிட்டபோதே மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 மேலும் தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாகச்  செயற்படுத்தப்பட்டு  வரும் இங்கு,  கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்களே இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .