2025 மே 14, புதன்கிழமை

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

R.Tharaniya   / 2025 மே 13 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று ​செவ்வாய்க்கிழமை (13)அனுஸ்டிக்கப்பட்டது.

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து தமிழின அழிப்பு,காணாமல் ஆக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கும் நிகழ்வு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் தலைவி திருமதி.அ.அமலநாயகி தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,பொதுமக்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு தமிழின அழிப்பு நாளை நினைவு கூர்ந்து,அஞ்சலி செலுத்தி,கஞ்சி தயாரித்து வழங்கி நினைவு நாளை அனுஸ்டித்தார்கள்.

க.விஜயரெத்தினம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X