R.Tharaniya / 2025 ஜூன் 11 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் புதிய தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி நியமிக்கப்பட்டுள்ளார் அவர் தலைமையில்மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் புதன்கிழமை (11) அன்றுபழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் ஒருங்கமைப்பில் நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம்,மீன்பிடி, சட்டவிரோத மண் அகழ்வு, காட்டு யானை தாக்கம், டெங்கு நோயின் தாக்கம்,அரசாங்கத்தின் சத்துணவு திட்டம், வீடமைப்பு திட்டங்கள், போக்குவரத்து, போதைப்பொருள் பாவனை, போன்ற விடயங்கள் பற்றி ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
மேலும் இவ்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையின்உயர் அதிகாரிகள் அரச திணைக்களங்களின் தலைவர்கள் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த பிரதி அமைச்சர் அருண்ஹேமச்சந்திரன் வேலைப்பளு காரணமாக மாவட்டத்திற்கு புதிய மாவட்ட அபிவிருத்தி குழுதலைவராக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



வ.சக்தி
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago