2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை உட்துறைமுகம் வீதியின் முந்தைய இலங்கை வங்கிகிளை கட்டிடத்திற்கு முன்பாக,வியாழக்கிழமை (30) அன்று காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கார், பட்டாரக லொறி,மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களேஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுங்க வீதி ஊடாக வந்து உட்துறைமுகம் வீதிக்கு திரும்பிய பட்டாரக லொறி மீது திருகோணமலை கடற்படைத்தளம் பக்கமிருந்துவந்து கொண்டிருந்தகார்,மற்றும் மோட்டார் சைக்கிள் மோதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X