2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
 
நிந்தவூர் ஆதார  வைத்தியசாலையிலுள்ள கொரோனாத் தடுப்புச் சிகிச்சை நிலையத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமினால் சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நேற்று முன்தினம் (11) வழங்கி வைக்கப்பட்டன.
 
நாட்டில் தற்போது நிலவும் கொரோனாத் தொற்றின் தீவிர தன்மையை கருத்தில்
கொண்டு இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இச்சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக, முதற்கட்டமாக 30 இலட்சம்
ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன எனவும்
நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .