2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மான்களை பாதுகாக்க நடவடிக்கை

Janu   / 2023 ஜூன் 25 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு சனிக்கிழமை   (24)  ஆரம்பிக்கப்பட்டது.கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம்,திருகோணமலை நகரசபையின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது

திருகோணமலை நகர சபையும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் இணைந்து திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர், திருகோணமலை நகர சபை செயலாளர், திருகோணமலை பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அ . அச்சுதன், எப்.முபாரக் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X