Janu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மாதாந்த மின் கட்டணத்தை செலுத்தாத மின் பாவனையாளர்கள் நிலுவைக் கட்டணத்தை செலுத்துமாறு, கல்முனைப் பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல் மின் மானி வாசிப்பவர்களுடாக மாதாந்த மின் கட்டண பட்டியலில் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலான கட்டணத்தை கொண்டிருப்பவர்களின் மின் துண்டிப்பு செய்யப்படவுள்ளதோடு, அவ்வாறு இணைப்பு துண்டிக்கப்படுமிடத்தில் மீள் இணைப்பை ஏற்படுத்துவதற்காக முற்று முழுதான மின் நிலுவைக் கட்டணம், தண்டப்பணம் மற்றும் மீள் இணைப்புக் கட்டணம் என்பன செலுத்த வேண்டுமெனவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாதாந்த மின்சாரப் பட்டியலில் காணப்படும் நிலுவையினை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறு மின் பாவனையாளர்களை கேட்டுகொண்டுள்ளனர்.
எம்.எஸ்.எம்.ஹனீபா
11 minute ago
24 minute ago
32 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
32 minute ago
33 minute ago