Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட
கிராமங்களில் வாய்க்கால் கரையோரங்கள், வயல்வெளிகளில் குடும்ப சகிதம் கூடுவதன்
மூலம் சுகாதார விதிமுறையை மீறி நடந்து கொள்பவர்களுக்கு அதிரடி நடவடிக்கையாக அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டு வருவதோடு சட்ட நடிவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாத் தொற்றினால் அதிகமானவர்கள் மரணித்துக்கொண்டிருக்கும் இன்றைய
கால கட்டத்தில் நாமே நம்மை பாதுகாக்கத் தவறினால் நமது வீடுகளில் இருக்கும்
முடியோர்கள் குழந்தைகளின் சுகாதார நிலை பாதிப்புக்குள்ளாகும்.
களியாட்ட நிகழ்வுகள், விருந்தோம்பல், ஒன்று கூடல்களில் இருந்து தவிர்ந்து கொண்டு
சுகாதார வழிமுறையைப் பின்பற்றி நடந்து கொள்ளல் அனைவரினதும் தலையாய
கடமையாகும்.
மக்களைப் பாதுகாப்பதற்காக இரவு பகலாகக் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்
சுகாதாரத்துறையினரின் வேண்டுகோளை மதித்து சுகாதார வழிகளுடன் நடந்து
கொள்ளுமாறு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ. காதர்
பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago