R.Tharaniya / 2025 மே 14 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (13) மூதூர் தங்கபுரத்தில் நினைவேந்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மூதூர் கிழக்கில் கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்ட தடைகள் கைதுகள் நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றின் காரணமாக இவ் வருட நினைவேந்தல் செயற்பாடுகளை சட்ட ஏற்பாடுகளுக்கமைய நேர்த்தியாக ஒழுங்கமைத்துச் செயற்படுத்தும்
நோக்கில் சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்துக்கான நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இதற்கமைய சம்பூர் தொடக்கம் வெருகல் வரையான பிரதேசத்தில் சுமார் ஏழு இடங்களிலும் திருகோணமலை நகரப்பகுதியில் இரண்டு இடங்களிலும் நினைவேந்தல் செயற்பாடுகளை தனியாகவும் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது
அதற்கமைய செவ்வாய்க்கிழமை (13)அன்று நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்குபடுத்தலில் பள்ளிக்குடியிருப்பு தங்கபுரத்தில் இரண்டாம் நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது உயிர் நீத்த உறவுகளுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது டன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் செயற்பாடுகள் இன்று புதன்கிழமை (14) கட்டைப்பறிச்சான் இறால் பாலத்தில் மாலை 3.00மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ள மையினால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பதோடு இச் செயற்பாடுகளுக்கு அனுசரனை வழங்கும் அனைவருக்கும் எமது நன்றிகளையும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துக் கொள்கின்றனர்.




ஏ.எச்.ஹஸ்பர் ஹஸ்பர்
25 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago