Editorial / 2025 நவம்பர் 25 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள்,பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பாரம்பரிய கடல் எல்லைகள் குளோபல் சீ புட் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, திங்கட்கிழமை (24) அன்று அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மூதூர் தஹ்வா நகர் கடற்கரை பள்ளிவாசல் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று முதலில் மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கோரிக்கைகள் உள்ளடங்கிய மனுவை சமர்ப்பிக்கப்பட்டது.பின்னர் மூதூர் பிரதேச செயலகத்தை சென்றடைந்த மீனவர் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மூதூர் பிரதேச உதவி செயலாளரிடம் வழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள்,மீனவர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.அதிக அளவில் சமூக நல அமைப்புகளும் பேரணியில் கலந்து கொண்டிருந்தன.
"மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்"
"கடல் வளங்களை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்"
"மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்"என்ற கோரிக்கைகளை முன்வைத்து பேரணியில் சென்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“நாங்கள் தினமும் கடலுக்குச் சென்று எங்கள் குடும்பங்களை நடத்துபவர்கள். எங்கள் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை சட்டவிரோதமும்,எமக்கு அநீதி இழைப்பதாகவும் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான எமது குடும்பங்கள் வாழ்வாதார இழப்புக்கு உள்ளாகலாகின்றனர்" என்று கூறினார்.
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago