R.Tharaniya / 2025 ஜூன் 15 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் யாசகப் பெண்ணை வாழைச்சேனை பொலிஸார் சனிக்கிழமை (14) அன்று எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஓட்டமாவடி - 3 ஆம் வட்டாரத்தில் யாசகம் கேட்டு வீடு வீடாக சென்ற பெண் ஒருவர் வீட்டில் இருந்த பெண்ணிடம் தேனீர் கேட்டுள்ளார்.
வீட்டிலிருந்த பெண் யாசகப் பெண் மீது பரிதாபம் கொண்டு தேனீர் தயாரிக்க சென்ற போது அங்கிருந்த கைபேசியை சூட்சமமாக திருடிச் சென்றுள்ளார்.
இவ்வாறு கைபேசியை திருடிச் சென்ற யாசகப் பெண் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கெமெரா மூலம் அடையாளம் காணப்பட்டார். அடையாளம் காணப்பட்ட யாசகப் பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
எச்.எம்.எம்.பர்ஸான்
44 minute ago
48 minute ago
57 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
57 minute ago
13 Mar 2026