Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 23 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர எனும் பகுதியில் வைத்து யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்து மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் புதன்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மூதூர் - மல்லிகைத்தீவச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா வர்ணகுல ரெட்ணம் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், தோப்பூர் -நாராயண புரத்தைச் சேர்ந்த யோகராசா (வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள மாங்குளம் என்ற பகுதியில் மீன் பிடித்து விட்டு தங்களுடைய வீட்டுக்கு திரும்புகையிலேயே யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் சேருவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.கீதபொன்கலன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .