2025 ஜூலை 02, புதன்கிழமை

யானைக் கூட்டத்தால் மக்கள் அவதி

Nirosh   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு - பேரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள காட்டுயானைக் கூட்டத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.

இரவு வேளையானதும் அப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் உட்பகுந்து அங்குள்ள வாழை, தென்னை, மா, பலா, கரும்பு, மரவெள்ளி, உள்ளிட்ட பயிர்களை அழித்து துவம்சம் செய்து வருவதாக அங்குள்ள மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

நேற்றிரவு (16) தும்பங்கேணி, களுமுந்தன்வெளி, இளைஞர் விவசாயத்திட்டம், திக்கோடை, பாலையடிவட்டை, நெல்லிக்காடு, உள்ளிட்ட பல கிராமங்களுக்கள் புகுந்த மூன்றுக்கு மேற்பட்ட காட்டுயானைக்கூட்டம் அங்குள்ள பயிர்களை துவம்சம் செய்துவிட்டு இன்று (17) காலை அப்பகுதியைவிட்டு நகர்ந்துள்ளது. 

இந்நிலையில் இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமக்கு யானை வெடிகளும், இல்லாமல் பெரும் அவஸ்த்தைப்படுவதாகவும், அம்மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

வெடிகள் வழங்குவதில் தாமதம் இருந்ததாகவும், தற்போதைக்கு யானைகளை விரட்டும் 1000 வெடிகள் வந்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அதனை வழங்கவுள்ளதாகவும்,  இப்பிரதேசத்திலிருந்து முற்றாக காட்டு யானைகளை விரட்டுவதற்கு ஆட்பலம் போதாதுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளியில் அமைந்துள்ள சுற்றுவட்டக் காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .