2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வயோதிப கணவன் மரணம்; மனைவி கைது

Editorial   / 2025 ஜூலை 06 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}



 எச்.எம்.எம்.பர்ஸான்
 

73 வயதுடைய கணவன் மரணமடைந்த சம்பவத்தில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த 73 வயதுடைய வயோதிபர் ஒருவர் அடி காயங்களுடன் கடந்த 29 ஆம் திகதி இரவு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி  வெள்ளிக்கிழமை (4) மரணமடைந்துள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட அவரது மனைவி ஊன்றுகோலால் தாக்கியதில் வயோதிபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .