Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Janu / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு , எருவில் கிராமத்தில் உள்ள மாலை வயல் பகுதியில் இருந்து சனிக்கிழமை (26) அன்று ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தை சேர்ந்த 44 வயதுடைய இரத்தினசிங்கம் உத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் அமைந்துள்ள அவரது வயலுக்குள் வேளாண்மையை பார்ப்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளதுடன் துவிச்சக்கர வண்டியை குளக்கட்டில் வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி தனது வேளாண்மைச் செய்கையை பார்வையிட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ள நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி வி.ஆர்.மகேந்திரன், சடலத்தை பார்வையிட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
27 minute ago
53 minute ago