2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வாக்காளர் அட்டைகள் விநியோகம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்  வியாழக்கிழமை (17) முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர்  திருமதி கிருபாலனி அருள்செல்வம் தெரிவித்தார்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 6.00 வரை தபால் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களால் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.எதிர்வரும் 29ஆம் திகதி வரை தபால் சேவகர்கள் வீடுவீடாகச் சென்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவுள்ளனர்.

வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதற்கான விசேட தினமாக எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள்  30 ஆம் திகதி தொடக்கம் தேர்தல் நடைபெறும் தினமான மே மாதம் 06 ஆம் திகதி திகதி பிற்பகல் 04.00 மணி வரை தமது அடையாளத்தை உறுதிப்படுத்த.

அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் தமது வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் அஞ்சல் அலுவலகங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.எம்.ஹனீபா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .