2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Mithuna   / 2024 ஜனவரி 21 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எப்.றிபாஸ்                     

அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்  சனிக்கிழமை(20) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

"மெஸ் லங்கா" நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்காகத் தள்ளு வண்டில்கள் மற்றும் அதற்குத் தேவையான ஆரம்பக் கட்ட வியாபாரத்துக்குரிய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர் ரீ.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உதவிச் பிரதேச செயலாளர் ராஷீத் யெஹியா, பிரதித்திட்டப்பணிப்பாளர் ஏ.எம்.தமீம், சிரேஷ்ட திட்டமிடல் உத்தியோகத்தர் யூ.எல்.எம்.ஆகிர், நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்  ஹசன் சியாத் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .