2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில், திருகோணமலை – கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

எம். என். மின்ஹா திருகோணமலை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், எம். ஏ. எப். இனாசிரின் மாவட்ட மட்டத்தில் ஆறாம் இடத்தையும் பெற்று இந்த சாதனையை நிலைநாட்டி மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  விஞ்ஞான பிரிவில், முதல் தடவையாக 13 மாணவிகள் இந்தப் பாடசாலையில் இருந்து தோன்றியிருந்தனர். இதில் பத்து மாணவிகள் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடசாலைக்கு விஞ்ஞான பிரிவிற்கான அனுமதி கிடைத்து முதல் தடவையிலே, இந்த மாணவிகள் குறித்த சாதனையை நிலைநாட்டி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த பாடசாலையில் விஞ்ஞான பிரிவைத் தொடங்குவதற்கு அனுமதி கொடுக்காமல் இருந்தார்கள்.பெரும் போராட்டங்களைச் செய்து அனுமதி பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏ.எச்.ஹஸ்பர் ஹஸ்பர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .