Mayu / 2024 ஜனவரி 02 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனொருவன் காணமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நேற்று (01) காலை சைக்கிளில் உணவகம் ஒன்றிற்கு செல்லும் போது முச்சக்கரவண்டியொன்றில் மோதியுள்ளார். இந்தநிலையில் முச்சக்கரவண்டிக்கு சிறு சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதி சிறுவனை தடுத்து வைத்துள்ளார்.
குறித்த சிறுவன் நீண்ட நேரம் வீடு வராததால் சிறுவனின் தந்தை தேடிய போது, சிறுவன் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து முச்சக்கரவண்டி சாரதியிடம் மகனைப்பற்றி விசாரித்தபோது, சிறுவனை தடுத்து வைத்து விட்டு அனுப்பிவிட்டேன் என சாரதி பதிலளித்துள்ளார்.
இதற்கமைய சிறுவனின் தந்தை சாரதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
9 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago