2025 ஜூலை 16, புதன்கிழமை

வீட்டுக்கு வீடு தனிமைப்படுத்தல்

Nirosh   / 2021 ஜனவரி 16 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.அஷ்ரப்கான்)

சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் நேற்றிரவு முதல் (15) மறு அறிவித்தல் வரும்வரை, மாலை 8 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை  “வீட்டுக்கு வீடு சுய தனிமைப்படுத்தல்” நடவடிக்கை சுகாதார துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் பிரதான வீதிகளில் மற்றும் உள் வீதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மாலை 8 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் தங்களது வீடுகளிலில் இருந்து வெளியேறுவதற்கும் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாலை 6 மணிக்குப் பின்னர் பொது இடங்களில் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டகல்களை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்பதோடு, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X