2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வெள்ளி விழாக் காணும் விபுலானந்தா முன்பள்ளி

Freelancer   / 2023 ஜனவரி 19 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு சகா

காரைதீவு விபுலானந்தா மொண்டசோரி பாடசாலையின் 25வது வருடாந்த விபுலமணிகளின் விடுகை விழா, பாடசாலை பணிப்பாளர் வி.ரி சகாதேவராஜா தலைமையில், காரைதீவு இராமகிருஷ்ண சங்க பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.

விழாவில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், ஆளுமை சார் அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன், பொலனறுவை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் சிவசுந்தரம் சசிகரன், கல்முனை வலய உதவி கல்வி பணிப்பாளர் ஆனந்தகுமாரசாமி சஞ்சீவன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்லாறு பிராந்திய பொறுப்பதிகாரி பொறியியலாளர் றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன், காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் திருநாவுக்கரசு உமாசங்கரன், ஓய்வு நிலை அதிபர் கணபதி பிள்ளை புண்ணிய நேசன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஆசிரியர்களான ஜெயநிலந்தினி, ரம்யா ஆகியோர் பெற்றோரால் கௌரவிக்கப்பட்டார்கள். பிள்ளைகளின் கண் கவர் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .