2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘வைத்தியசாலை நாளை மீளத் திறக்கப்படும்‘

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவருக்கும், அலிக்கம்ப பிரதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்த சிலருக்கும் ஏற்பட்ட  முரண்பாட்டில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அங்கு பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி பணிக்கு வர மறுத்ததால் சில நாட்களாக குறித்த வைத்தியசாலை பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணனை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பினையடுத்து நாளை குறித்த வைத்தியசாலையைத்  திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .