2025 ஜூலை 30, புதன்கிழமை

பனி மரதன் போட்டியில் தமிழக வீரர் உலக சாதனை

Editorial   / 2024 மே 27 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீரில் நடைபெற்ற பனி மரதன் போட்டியில் தமிழகத்தின் தேன்கனிகோட்டையைச் சேர்ந்த வீரர் உலக சாதனை படைத்துள்ளார். 28 வயதான மது தற்போது காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்த வருடம் பெப்ரவரி 25ஆம் திகதி காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் உலக சாதனைக்கானப் பனி மரதன் போட்டி நடைபெற்றது.

இதில் மதுவும் பங்கேற்றிருந்தார். அவர் உறைபனியில் 10 கிலோ மீற்றர் தொலைவை 28 நிமிடங்கள், 8 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இதையடுத்து போட்டி ஏற்பாட்டாளர்களால் அவருக்குப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், ‘அஃபீஷியல் வேர்ல்ட் ரெக்கோர்ட்’ உள்ளிட்ட சாதனைப் புத்தகங்களில் வீரர் மதுவின் பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .