A.P.Mathan / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலக்கரி முறைகேடு இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் 16,000 கோடி (இந்திய) ரூபாய் கிரானைட் குவாரி முறைகேடுகள் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுரை மாவட்டத்தில் அதிரடி கலெக்டராக இருந்த சகாயம் தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை "கிரானைட் சாம்ராஜ்யத்தின்" அதளபாதாளத்தை அசைத்துப் பார்த்துவிட்டது. அரசுக்கு வர வேண்டிய வருமானத்தை தங்கள் கணக்கில் திருப்பி விட்டுக் கொண்டவர்கள் இப்போது தடுமாறுகிறார்கள். கிரானைட் சாம்ராஜ்யத்தின் முக்கியத்தூணாக இருந்த பி.ஆர்.பழனிச்சாமி (பி.ஆர்.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படுபவர்) இப்போது சிறைக் கொட்டடியில் இருக்கிறார். அவரது மகன்கள் தேடப்படுகிறார்கள். தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி வலை வீசி தமிழக பொலிஸால் தேடப்படுகிறார். "அவர் எங்காவது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றால் எங்களுக்கு தகவல் கொடுங்கள்" என்று குடியுரிமை அதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதுவரை பி.ஆர்.பி.யின் மீது 11இற்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டு விட்டன.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .