Super User / 2012 மார்ச் 26 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்ட கடந்த வியாழக்கிழமையே அதே பேரவையில் இஸ்ரேல் மேற்குக் கரையில் குடியேற்றங்கள் மூலம் பலஸ்தீன மக்களின் மனித உரிமைகளை மீறுவதற்கு எதிராகவும் ஒரு பிரேரணை நிரைவேற்றப்பட்டது. விந்தை என்னவெனில் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கவென பிரேரணை ஒன்றை முன்மொழிந்த அமெரிக்கா மட்டுமே பலஸ்தீன மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவென கொண்டு வரப்பட்ட பிரேரணையை எதிர்த்தது.
ஆனால் இந்த விடயத்தில் அவர்களுக்கு போலவே அரசாங்கத்திற்கும் மகிழ்ச்சியடைவதற்கு காரணங்கள் இருக்கின்றன. அரசாங்கம் ஜெனீவாவில் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியடைந்த போதிலும் அரசியல் ரீதியாக பாரிய அபாயமொன்றை தவிர்த்துக் கோண்டது.
இந்த முறையும் கருணாநிதி ஒரு கட்டத்தில் தமது நெருக்குதலை ஏதோ காரணத்திற்காக தளர்த்தினார். பின்னர் மீண்டும் இறுகப் பிடித்தார். எனவே தமிழ்நாட்டு நெருக்குதலை சமாளிக்க முடியும் என பிரதமர் மன் மோகன்சிங்கிற்கு தெரியும். ஆனால், ராஜதந்திர நடவடிக்கைகள் விளையாடல்ல, அவற்றில் நம்பகத் தன்மையானது மிக முக்கியம் என்று இலங்கைக்கு உணர்த்தவும் இந்தியாவுக்கு தேவைப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.
ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை அமெரிக்கா பின்னர் திருத்தியே வாக்கெடுப்பிற்கு விட்டது. அதுவும் இலங்கைக்கு சாதகமாகியது. ஆரம்பத்தில முன் வைக்கப்பட்ட பிரேரணையின் 2ஆவது மற்றும் 3ஆவது வாசகங்களே இலங்கைக்கு பிரச்சினையாகவிருந்தன. 2ஆவது வாசகத்தின் படி மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வின் போது இலங்கை மனித உரிமை விடயத்தில் தாம் என்ன நடவடிக்கை எடுத்தோம் என்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. 2 hours ago
3 hours ago
கல்முனைமகன் Monday, 26 March 2012 07:29 PM
ஜெனீவாவில் நமது நாட்டுக்கு எதிராக பிரரனை நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் பிரரனைக்கு எதிராக வாக்களித்த நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் முஸ்லீம் நாடுகளாகும்.
இதற்கு முஸ்லீம் அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சியும் முஸ்லீம்கள் அதிகமாக வீதியில் இறங்கியதுமே ..
இவைகளுக்கு பிராயச்சித்தமாக ஜனாதிபதி அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்திட்டத்தயவது வழங்குவாரா?
அரசாங்கத்துக்காக முஸ்லீம்கள் மீண்டும் வீதியில் இறங்க .......
Reply : 0 0
jeyarajah Tuesday, 27 March 2012 11:33 PM
அயுப் அவர்களே,நன்றி, இது எமது நாட்டின் இறையாண்மைப் பிரச்சனையோ இல்லை மக்களின் பிரச்சனையோ இல்லை. இது முழுக்க முழுக்க அரசின் பிரச்சனை. இது மனித உரிமை சம்பந்தமானது. அமெரிக்கா மீறினால் நானும் மீறலாம் என்ற விவாதம் என்னை நிரபராதி ஆக்காது. அமெரிக்காவின் விடயத்தை விட எமது விடயமே எமக்கு இப்போது முக்கியம்.
முக்கியமாக இந்த தருணத்தை விட்டால் எமது கதை மூடப்பட்டு விடும். அமெரிக்காவும் பலஸ்தீனும் இஸ்ரேலும் எப்போதும் எடுத்துக் கொள்ளக் கூடிய விடயம். அது எப்போதோ சர்வதேசப் பிரச்சனை ஆகி விட்டது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago