A.P.Mathan / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் ஜூன் 12ஆம் திகதியன்று மீண்டும் ஓர் இடைத் தேர்தல் மோதல் உருவாகப் போகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், எதிரணியில் இருக்கும் தி.மு.க.வும் களத்தில் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எளிமை மிக்கவராக திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இறந்ததையொட்டி புதுக்கோட்டை இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே சங்கரன்கோவில் இடைத் தேர்தலை விட அதிக எண்ணிக்கையில், அதாவது 52 சிறப்பு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து களமிறங்கியுள்ளது அ.தி.மு.க. அதுமட்டுமல்ல, கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுக்காமல் தானே களமிறங்குகிறது. புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவித்த அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், "அ.தி.மு.க. தலைமையிடம் அப்பொயின்மென்ட் கேட்டு கடிதம் எழுதினேன். அதற்கு பதில் வரவில்லை. ஆகவே இடைத் தேர்தல் சூழ்நிலைகளை மனதில் வைத்து அங்கு போட்டியிடுவதில்லை" என்று அறிவித்தார் தா.பாண்டியன். அதே நேரத்தில் அ.தி.மு.க. தன் கட்சி வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை அறிவித்து இருக்கிறது. இவர் ஏற்கனவே இங்கு மூன்று முறை போட்டியிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற விஜயரகுநாத தொண்டைமானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையை அனைவரும் "தொண்டைமான்" தொகுதி என்றே கூறுவார்கள். அந்த அளவிற்கு ராஜா வம்சத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இது.1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago