Super User / 2012 ஜூலை 08 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலத்திரனியல் ஊடகங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய வகையில், பத்திரிகை பேரவை சட்டத்தை அரசாங்கம் திருத்தப்போவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருக்கிறார். இலத்திரனியல் ஊடகங்கள் குறிப்பாக இணையத் தளங்கள் சட்டத்துக்குப் புறம்பாகவும் நாகரிகம் மற்றும் ஊடக ஒழுக்க நெறிகளுக்கு முரணாகவும் செயற்படுவதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறியிருக்கிறார்.
விந்தை என்னவென்றால் இதே எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகளாக மாறிவிட்டால் அக்கட்சிகள் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவதில்லை. அக்கட்சிகள் அப்போது கடமைகளையும் ஒழுக்க நெறிகளையும் பற்றியே பேசுகின்றன. முன்னர் ஆளும் கட்சியில் இருந்து இப்போது எதிர்க்கட்சியில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்களே அப்போது ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவார்கள்.
ஊடகத்துறை தொடர்பான தற்போதைய சட்டங்கள் அனைத்தும் இணையத்தளங்கள் உருவாகு முன் கொண்டுவரப்பட்டவையே. எனவே இணையத்தளங்களுக்கு கட்டுப்பாடில்லாமல் செயற்பட முடிந்துள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .